kanagarajan எழுதியவை | பிப்ரவரி 5, 2015

ஒரு கடிதம்…

ஜனவரி 24, 2015

அன்புள்ள கனகு,

உங்கள் சிறுகதைத் தொகுப்பைப் படித்து முடித்துவிட்டேன். அதற்கு இத்தனை காலம் எடுத்துக்கொண்டதற்கு முதலில் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். என் கைக்கு வந்தவுடனேயே அது எங்கோ தொலைந்து போய்விட்டதுதான் காரணம்.

இருக்கிறதிலேயே ஆகக் கடினமான காரியம் மிக எளிமையாக எழுதுவதுதான். அது தங்களுக்கு லாகவமாக வருகிறது. ஒவ்வொரு கதையும் அதன் கச்சிதமான சிறுகதை வடிவத்திற்குள் இயல்பாய் பொருந்தியிருக்கிறது. அதற்காக எனது பாராட்டுக்கள்.

அநேகம் கதைகளில் வரும் சம்பவங்கள் பெரும்பாலும் கிராமத்திற்கும், டவுனுக்கும் இடைப்பட்ட பிரதேசங்களில் நடப்பவை என்பதால் படிக்கும்போது என்னை மறுபடி கோவை பொள்ளாச்சி ஏரியாக்களுக்கு கைப்பிடித்து அழைத்துச் செல்கின்றன. நான்கூட இந்த மாதிரி கதைகளைத்தான் முன்பு எழுதிக்கொண்டிருந்தேன். பெருநகரத்துக்குள் அடியெடித்து வைத்தபிறகு இந்த பதினாலு வருடங்களில் எழுத்தின் தன்மை நகரம் சார்ந்த மனிதர்கள் பற்றியதாக மாறிவிட்டதை உணர்கிறேன். ஆக நான் அந்த மனிதர்களின் அண்மையை இழந்துவிட்டேன் என்கிற நிதர்சனம் உறைக்கிறது.

மிக மிக யதார்த்தமாக நம்மிடையே உலவும் மனிதர்களையும், அவர்களின் நடவடிக்கைகளையும், நடைமுறை நிஜம் கலந்து உங்கள் சிறுகதைகளில் நடமாடவிட்டிருக்கிறீர்கள். சும்மா ஒரு ட்விஸ்ட்டுக்காக கதை முடிவை சட்டென புரட்டிப் போடுதல் போன்ற கிம்மிக்ஸ்களுக்கு இடம் தராமல் அதன் போக்கில் விட்டு இயல்பாக முடிக்கும் பாங்கு உங்களுக்கு அருமையாக கை வந்திருக்கிறது. எந்த ஒரு கதையும் தொய்வாக இல்லை. அளவாக கச்சிதமாக நேரிடையாக விஷயத்தைச் சொல்லும் தொணியில் உள்ளது. ஒரு தேர்ந்த சிறுகதையாளனால் மட்டுமே இது முடியும்.Marupadiyum-Wrapper copy

எனக்குப் பிடித்த கதைகள் என்று சொல்லவேண்டுமென்றால் மறுபடியும், விலை, வாழ்க்கையும் வாழ்ந்துகொண்டிருப்பவர்களும், தூண்டில், பலி ஆகியவைகளைச் சொல்லலாம். ஒரு சிறுகதைக்கான சகல அம்சங்களுடன் அருமையாக உள்ளன. மற்ற கதைகளும் அதற்கான பிரத்யேகத் தனித்தன்மையுடன் இருக்கின்றன என்றாலும் மேற்கண்ட கதைகள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை.

அனைத்து சிறுகதைகளிலும் வசனங்கள் எந்த ஒரு செயற்கைத் தனமும் இல்லாமல் மிக மிக இயல்பாக அமைந்துள்ளன. ஒரு நல்ல சிறுகதைத் தொகுதி படித்து முடித்த திருப்தி. இன்னும் தொடர்ந்து எழுதுங்கள். உங்களிடமிருந்து இது போல் இன்னும் நிறைய படைப்புகளை எதிர்பார்க்கிறேன். அதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

அன்புடன்

ரகு (சித்ரன்)

MANATHIL

குறிப்பு : நண்பர் ரகு ‘சித்ரன்’ என்கிற பெயரில் சிறுகதைகள் எழுதி வருகிறார். 2004ஆம் ஆண்டு இவருடைய சிறுகதைத் தொகுப்பு ‘மனதில் உனது ஆதிக்கம்’ கிழக்கு பதிப்பகம் வெளியிட்டது.

பிறந்தது கேரளத்தில் ஒரு குக்கிராமம். சிறுவயதிலேயே தமிழகத்திற்கு இவர் குடும்பம் குடிபெயர்ந்துவிட்டது. உடுமலைப்பேட்டையிலும் பொள்ளாச்சியிலும் படிப்பை முடித்து, தற்சமயம் சென்னையில் மல்டி மீடியா நிறுவனத்தில் பணிபுரிகிறார்.  chithran.blogspot.com


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: